close
Choose your channels

தமிழில் ஒரே ஒரு படம்: மும்பையில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் ஒரே ஒரு படம் நடித்துள்ள பிரபல நடிகை அதிலும் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஷ்மிகா, விஜய்யின் ‘தளபதி 65’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாலிவுட்டிலும் ராஷ்மிகா கால் வைத்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் ’மிஷன் மஞ்சு’ என்ற திரைப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதால் அவருக்கு மேலும் சில பாலிவுட் வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அடிக்கடி மும்பை செல்ல உள்ளதால் மும்பையில் சொந்த வீடு ஒன்றை ராஷ்மிகா வாங்கி விட்டதாகவும் அந்த வீட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை ஐதராபாத்தில் இருந்து வரவழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 65’ திரைப்படத்தின் நாயகியாகவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டால் சென்னையிலும் ஒரு வீடு வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.