23 வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்? ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,March 15 2023]

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் மீது கிரஷ்ஷா? என்ற கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் சமீபத்தில் வெளியான விஜய்யின் ’வாரிசு’ திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார். அப்போது கிரிக்கெட் வீரர் சுப்மன் மீது கிரஷ்ஷா? என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்ல தயங்கிய அவர் அதன் பிறகு கண்ணடித்து ஆம் என்று ஒப்புக்கொண்டார். அவரது இந்த பதில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இளம் கிரிக்கெட் சுப்மன் கில் வயது 23 என்பதும் ரஷ்மிகா மந்தனாவுக்கு 26 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'கண்ணை நம்பாதே முதல் 'வாத்தி' வரை: இந்த வார திரையரங்குகள் மற்றும் ஓடிடி ரிலீஸ்: ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகி சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செட்ய்து வரும் நிலையில் இந்த வாரம் திரையரங்கில் உதயநிதி

ஆஸ்காரை அடுத்து புக்கர் .. பட்டியலில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளரின் புத்தகம்..!

தமிழ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று நாட்டிற்க்கே பெருமை சேர்த்த நிலையில் தற்போது தமிழ் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் புக்கர் விருதுக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் படக்குழு.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

'லால் சலாம்' படத்தில் இணைந்த காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியுடன் நடிக்கின்றாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

ஷாருக்கான் - அட்லியின் 'ஜவான்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.