ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ்.. ரன்னிங் டைம் 3.21 மணி நேரம்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. இந்த திரைப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் சென்சாரில் இந்த படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 3 மணி நேரம் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் பொறுமை இழக்கும் நிலையில் 3 மணி நேரத்துக்கு அதிகமாக உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதை கவருமா? ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது.

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும்: 'கேப்டன் மில்லர்' சிங்கிள் பாடல்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் வெளியேறுவது புல்லிங் குரூப்பில் உள்ள ஒருவரா? முதல் 2 இடத்தில் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்  ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்

பிப்ரவரியில் முக்கிய நாளை குறி வைத்த கவினின் 'ஸ்டார்' குழுவினர்.. அடுத்த படமும் ரெடி..!

கவின் நடித்த நான்காவது திரைப்படம் 'ஸ்டார்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

அஜர்பைஜானில் தொடர்ந்து நடக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. டிசம்பர் 24ல் சென்னை வருவாரா அஜித்?

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.