close
Choose your channels

விஜய்யுடன் செல்பி.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த 'வாரிசு' புகைப்படம்

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் படப்பிடிப்பு முடியும் முன்பே இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வாரிசு படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.