close
Choose your channels

கார்த்திக்கு ஜோடியாகும் 'தளபதி 63' படத்தை மிஸ் செய்த நடிகை

Friday, February 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம்' நாயகி ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இணையதளங்களில் வதந்திகள் பரவியது. இந்த வதந்தி உண்மையானால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ராஷ்மிகாவே தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால் 'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் விரைவில் தமிழ்ப்படம் ஒன்றில் நடிப்பேன் என்று ராஷ்மிகா கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கூறியது போலவே கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது

'கீதா கோவிந்தம்' படத்தை அடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ராஷ்மிகா தற்போது டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.