கொரோனாவால் இறந்த 87 வயது நபரின் உடலை எலி கடித்து குதறிய கொடூரம்!

  • IndiaGlitz, [Tuesday,September 22 2020]

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சமீபத்தில் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்தார் இதனையடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது உடலில் கால் மற்றும் முகம் பகுதியில் எலி கடித்த தடம் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து அவர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நீதி கேட்ட போது அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் மருத்துவமனை, கொரோனாவால் இறந்தவரின் உடலை பாதுகாக்க கூட முடியவில்லையா? என்று உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

ரிக்சா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!

லண்டனில் பாலே டான்ஸ் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என ரிக்சா ஓட்டுநர் ஒருவரின் மகன் கனவை நனவாக்க பிரபல நடிகர் ஒருவர் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வெளி வந்திருக்கும்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆவணங்களை பட்டியலிட்டு ஐ.நா அவையையே தெறிக்கவிட்ட தமிழர்…

ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45 ஆவது கூட்டம் தொடங்கப்பட்டு,

'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு

எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

ரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா??? சுவாரசியத் தகவல்!!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன ரஃபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.