'சங்கத்தமிழன்' நாயகிக்கு டப்பிங் கொடுத்த நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் அதற்கு முன்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'சங்கத்தமிழன்' திரைப்படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று நாயகி ராஷிகன்னா காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது. ராஷிகண்ணாவுக்கு நடிகையும் டப்பிங் கலைஞருமான ரவீனா டப்பிங் செய்துள்ளார். இவர் ஏற்கனவே 'அயோக்யா', 'அடங்கமறு' ஆகிய திரைப்படங்களில் ராஷிகண்ணாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டப்பிங் பணிளை முடித்துவிட்ட ரவீனா, இயக்குனர் விஜய் சந்தர் உடன் பணிபுரிந்த அனுபவம் என்றும் சிறப்பானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரவீனா தற்போது 'ராக்கி' மற்றும் 'காவல்துறை உங்கள் நண்பன்' போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவினை கவிழ்க்க திட்டமிடும் வனிதா, சாக்சி கூட்டணி!

பிக் பாஸ் போட்டியாளர்களில் 15 பேர் ஒரு பக்கமும், வனிதா மட்டும் இன்னொரு பக்கமும் இருந்தாலும்கூட வனிதா மொத்த 15 பேர்களையும் சமாளித்து விடுவார்

சத்குரு ஜக்கிதேவ் முயற்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வந்தபோதிலும், அவருக்கு ரஜினிகாந்த், இளையராஜா உள்பட பல ஆன்மீகவாதிகள் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்

நடிகையின் வயிற்றில் இருப்பது என் குழந்தை: யூடியூப் பிரபலம் பரபரப்பு தகவல்

லண்டன் தொழிலதிபரை திருமணம் செய்த நடிகையின் வயிற்றில் இருப்பது எனது குழந்தை என யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 சாக்சி, அபிராமி, மோகன் வருகை: கவின் மட்டும் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் சாக்சி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவிருப்பதாக நேற்றே நாம் பார்த்தோம்.

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்தேசிய விருது என்ற உயரம் பெற்ற சேரனும், பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற ஷெரினும்