ரவி மோகன் அடுத்த படத்தின் நாயகி அறிவிப்பு.. பிறந்த நாளில் வெளியான போஸ்டர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால், சிறப்பு போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்து வரும் நிலையில், அவர் ’கராத்தே பாபு’ என்ற படத்தில் நடிக்கிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும், இது குறித்த வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிகர் நாசர், எதிர்க்கட்சித் தலைவர் கதாபாத்திரத்தில் கே. எஸ். ரவிக்குமார், மற்றும் ரவி மோகன் எம். எல். ஏ கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்புகளையும் ஆட்டி வைக்கும் ஒரு கதாபாத்திரமாக அவர் அமைந்துள்ளார். இதனால், அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
கவின் நடித்த ‘டாடா’ என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் சிந்து பிரியா நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, சிந்து பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இது குறித்த போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Wishing a Very Happy Birthday to the Gorgeous Actress @sindhupriyaks
— Screen Scene (@Screensceneoffl) March 15, 2025
Wishes from @screensceneoffl & Team #Karatheybabu
Dir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by #SundarArumugam @Screensceneoffl @iam_RaviMohan #DaudeeJiwal @ksravikumardir @actornasser @Ezhil_Dop… pic.twitter.com/WYtMpx6PFT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com