close
Choose your channels

விஜய்யின் 'தெறி' தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர்!

Tuesday, March 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தெறி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பிரமாண்டமான விளம்பரங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் விஜய்யின் விஜயகுமார் கேரக்டரில் பிரபல் தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஒரு நாயகியாக கேதரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே Kandireega என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், வரும் தசரா விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.