'இந்த ஜெயில்ல இருந்து ஒருத்தன் கூட தப்பிச்சது இல்லை: ரவிதேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான ’டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. இந்த படம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசரை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டீசரின் முதல் காட்சியிலேயே நாகேஸ்வரராவ் என்ற கொடூரமான கிரிமினல் சிறையில் இருந்து தப்பித்து சென்று விட்டதாக அறிவிக்கப்படும். இதுவரைக்கும் இந்த ஜெயிலில் இருந்து ஒருத்தர் கூட தப்பித்து போனதில்லை என்று ஜெயிலர் கூறிய நிலையில் நாகேஸ்வரராவ் மட்டும் தப்பித்து போனது எப்படி என்பதுதான் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

நாகேஸ்வரராவ் ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் மிகப்பெரிய தலைவராக இருப்பார், விளையாட்டுத் துறையில் இருந்தால் மிகப்பெரிய விளையாட்டு வீரராக இருப்பார், ராணுவத்தில் இருந்திருந்தால் ஒரே ஆளாக ஒரு போரையே நடத்திருப்பார், ஆனால் அவர் துரதிஷ்டவசமாக அவர் ஒரு கிரிமினல் ஆகிவிட்டார், அவரை பிடிப்பது மிகவும் சிரமம் என்று டெல்லி போலீசார் பேசுவது போன்ற காட்சி ஒன்று இந்த டீசரில் உள்ளதை அடுத்து நாகேஸ்வரராவ் என்ற ரவிதேஜாவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பில்டப் செய்யப்பட்டிருக்கும்.

அதிரடி ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் ரவிதேஜா, நுபுர் சனான், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வம்சி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் மதி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் ரவிதேஜாவின் முதல் பான் - இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெயிலர்' படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வார வசூல் குறித்த நிலவரத்தை

கிளாமர் இல்லாமல் ஒரு போட்டோஷூட்.. மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

'சீதாராமம்' என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

20 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் மணிரத்னம் நாயகி.. 'கீதாஞ்சலி'யை மறக்க முடியுமா?

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென வந்த போலீஸ்.. என்ன ஆச்சு விஜய் டிவி புகழ்?

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் நடந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென காவல்துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை திரும்பும் முன் கவர்னரை சந்தித்த ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் நிலையில் அவர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் ஜார்கண்ட் மாநில