பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு?

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத நோட்டுக்களை 2017 மார்ச் 30ஆம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்த திடீர் அறிவிப்பால் கருப்பு பண முதலாளிகள் மாட்டினார்களா? என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு விதித்திருந்த மார்ச் 30ம் கடந்துவிட்டது. இருப்பினும் ஒருசில இடங்களில் பழைய நோட்டுக்கள் பிடிபட்டு கொண்டுதான் உள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கும், அஞ்சல் நிலையங்களுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி தற்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள தற்போது 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த அவகாசம் பொதுமக்களுக்கு இல்லை என்பதும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உபேர் கால் டாக்ஸி சி.இ.ஓ திடீர் ராஜினாமா

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் 570 நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் உபேர் கால் டாக்ஸி...

மக்களின் மனங்களை விஜய் வெல்ல இதுதான் காரணங்கள்

ஒரு படத்தில் நடித்தோமா, காசை வாங்கி கல்லாவில் போட்டோமா என்று திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் இருக்கும் நிலையில் ஒரு நடிகனின் வேலை நடிப்புடன் நின்றுவிடுவதில்லை, தன்னை மாஸ் ஸ்டாராக மாற்றிய ரசிகர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் ஒருசிலர் தான். அவர்களில் ஒருவர் இளையதளபதி விஜய் ħ

இளையதளபதி விஜய் 61 முதல்பார்வை ஆச்சரிய தகவல்கள்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஏற்படுத்த விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்...

அரசுப்பேருந்தில் திடீர் தீ விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...

நான் பதவி விலக கோஹ்லியே காரணம்! கும்ப்ளே மறைமுக குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில்கும்ப்ளே பதவியேற்றதில் இருந்தே இந்திய அணி வியக்கத்தக்க முன்னேற்றங்களை பெற்று வந்தது. சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டி தவிர இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது என்று கூறலாம்...