ஒட்டுமொத்தமாக சிராஜ் வீட்டிற்குப் படையெடுத்த ஆர்சிபி அணியினர்… வைரலாகும் புகைப்படம்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடிவரும் முகமது சிராஜ் கட்டியுள்ள புது வீட்டிற்கு ஒட்டுமொத்த ஆர்சிபி அணி வீரர்களும் வருகை தந்திருந்த புகைப்படம் ரசிகர்களிடையே தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் துவக்கம் முதலே அதிக ஆக்ரோஷம் காட்டிவந்த ஆர்சிபி அணி குறித்தும் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அந்த அணி மோசமாக ஆடுவதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் வீரரும் ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடிவரும் வீரருமான முகமது சிராஜ் வீட்டிற்கு அந்த அணியின் அனைத்து வீரர்கள் வருகை தந்துள்ளனர். காரணம் ஹைதராபாத்தில் உள்ள ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் சிராஜ் புது வீட்டைக் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு தனது அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று முன்னாள் கேப்டன் விராட் கோலியைத் தவிர தற்போதைய கேப்டன் டூப்ளசிஸ் வரை அனைத்து வீரர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே புது உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனைப் பொறுத்த வரைக்கும் ஆர்சிபி அணி இதுவரை 12 போட்டிகளில் பங்குபெற்று 6 வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றிப்பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஐபிஎல் முடிந்ததும் நேரடி தமிழ் படத்தை ரிலீஸ் செய்கிறதா ஜியோ சினிமா?

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இலவசமாக ஜியோ சினிமா ஒளிபரப்பி வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்த ஓடிடி தளத்திற்கு லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்

வெங்கட் பிரபு படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளம் இத்தனை கோடியா? தென்னிந்தியாவில் முதலிடம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதி

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த சிஎஸ்கே வீரர்… காரணம் தெரியுமா?

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவரும் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தனது மனைவியுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார்.

அந்த படத்தில் நான் நடித்திருந்தால் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த சூப்பர் ஹிட் படத்தில்  அவரது கேரக்டரில் நான்  நடித்திருந்தால் அவரைவிட நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மாமன்னன்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. வடிவேலு ரசிகர்கள் குஷி..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.