கொள்ளையர்களை மன்னிப்பதாக கிம் கர்தாஷியன் வாக்குமூலம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல அமெரிக்க நட்சத்திரமும் தொலைக்காட்சி பிரபலமுமான கிம் கர்தாஷியன் தான் பாரீசில் கொள்ளையர்களிடம் சிக்கியபோது அவர்கள் தன்னை பலாதகாரம் செய்து கொலை செய்யக்கூடும் என அஞ்சியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்,
2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலை நகர் பாரிசில் ஒரு ஃபாஷன் வீக் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கிம் கர்தாஷியன் தங்கியிருந்த அபார்ட்மெண்டுக்குள் மாறு வேடத்தில் நுழைந்த பத்துபேர் கொண்ட கும்பல் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி கண் கை கால் வாய் போன்றவற்றை டேப்களால் சுற்றி, அவரை செயல்பட விடாமல் குழியலறையில் அடைத்த பின்னர் அவர் வைத்திருந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர்,
கிம் கர்தாஷியன் இந்த சம்பவத்தைக் குறித்து பேசுகையில், தாம் சாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கி நிற்கும் அளவுக்கு தான் அச்சுறுத்தப் பட்டாலும், கொள்ளைக்காரர்களை இப்போது மன்னிப்பதாகக் கூறினார். பேசும் போதே பலமுறை கலங்கி அழுத அவர் தன்னை அவர்கள் பலவந்தப்படுத்தி கொல்லப் போவதாக நினைத்ததாகவும், அவர்கள் தன்னை கட்டிப் போட்டு, 4மில்லியன் டாலர் மதிப்புள்ள திருமண மோதிரம் உள்பட எல்லா நகைகளையும் பிடுங்கிக் கொண்டாலும், உடல் ரீதியாக தன்னை தாக்கவில்லை என்றார். இந்த நிகழ்ச்சி தன் வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும், பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்று உணர்ந்துவிட்ட தான் இப்போது வீட்டில் பாதுகாவலர்களை நியமித்துள்ளதாகவும் கூறினார். அதே சமயத்தில் அங்கிருந்த சிமோன் ஹரோச் என்ற அவரது ஸ்டைலிஸ்டும் தமது வாக்குமூலத்தை அளித்தார்.
தாக்குதல் நடந்த போது தூங்கிக் கொண்டிருந்த அவர் அதை ஒரு “பயங்கரம்” என்று வருணித்தார். ஹரோச் உடனடியாக குளியலறையில் போய் ஒளிந்து கொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். அவருமே வாக்குமூலத்தின் போது அவ்வப்போது அழுதபடியே பேசினார். அந்த கொள்ளைசம்பவம் தம்மை உளவியல் ரீதியாக பாதித்ததாகவும், செலிப்ரெட்டி என்ற வார்த்தையே மனதில் பயத்தை உண்டாக்குவதாகவும் கூறினார்.குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒன்பது ஆண்கள், ஒரு பெண் அடங்கிய கொள்ளையர் கும்பலில் ஆயுதம் தாங்கிய கொள்ளை மற்றும் கடத்தல் புகார்களின் பேரில் ஐந்து பேர் ஆயுள் தண்டனை பெற சாத்தியமுள்ளது. மற்றவர்கள் அரசு அங்கீகாரமில்லாத ஆயுதங்களை வைத்திருந்த குற்றங்களின் பேரில் தண்டனை அடையலாம்.
கொள்ளையர்கள் கால்நடையாகவும், சக்கிலிளும் தப்பிச் சென்ற போது தவறவிட்ட ஆறு வைரங்கள் கொண்ட ஒரு சிலுவையை சாலையில் சென்ற ஒருவர் எடுத்து காவல்துறையில் ஒப்படைத்தார். 4மில்லியன் டாலர் மதிப்புள்ள மோதிரம் உள்பட பல நகைகளும் திரும்ப கிடைக்கவில்லை. நீதிமன்ற இருக்கைகளை அதிகாலையிலேயே ஆக்ரமித்த கிம்மின் விசிறிகளுடன் சமூக வலைதள பிரபலம் லியோ செயிண்ட் சார்லஸும் இணைந்து கொண்டு கிம்முக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததோடு அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com
Comments