close
Choose your channels

ரெஜினாவின் 'சூர்ப்பனகை': த்ரில் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்த ‘சூர்ப்பனகை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் சமகால காட்சிகள் ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிரைலரில் இருந்து இந்த படம் திகில் கதையம்சம் கொண்டது என்பதும் வித்தியாசமான பேய் படம் என்பதும் தெரிய வருகிறது.

இந்த படத்தில் நடிகை ரெஜினா இரண்டு விதமான கெட்டப்புகளில் வருகிறார். பிளாஷ்பேக் காட்சியில் அவர் ஒரு ஜமீன்தார் பெண் போலவும் சமகால காட்சியில் அவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் நடித்துள்ளார் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது. மேலும் அக்சரா கெளடாவும் ஒரு திகில் கேரக்டரில் நடித்துள்ளார்.

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரெஜினா, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.