close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா?

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் அவர் நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகின என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ் & டிகே, தற்போது ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் வெப்தொடர் ஒன்றை இயக்கிவுள்ளார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த தொடரில் நடிகை ரெஜினாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இந்த தொடரில் மிக முக்கிய கேரக்டரில் ரெஜினா நடிக்கிறார் என்றும் அவரது கேரக்டர் தான் திருப்புமுனை கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

நடிகை ரெஜினா ஏற்கனவே ஆச்சாரியா, சூர்ப்பநகை, பார்டர், பார்ட்டி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.