த்ரிஷாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் திட்டம்

  • IndiaGlitz, [Tuesday,July 09 2019]

த்ரிஷா நடிப்பில் வெளியான '96' மற்றும் 'பேட்ட' ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை' ஆகிய படங்கள் பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 'கர்ஜனை' திரைப்படம் வெளிவரவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய கர்ஜனை இயக்குனர் சுரேந்தர் பாபு, ' இந்த படத்தை கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பித்து 27 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். அதேபோல் 2018ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளும் முடிந்துவிட்டது. இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் த்ரிஷாவே ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானது வருத்தமடைய செய்தாலும், தற்போது ஒரு பெரிய நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

த்ரிஷா, வம்சி கிருஷ்ணா, மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

More News

விக்ரம் படத்தில் நடிக்க வேண்டுமா? ஒரு அரிய வாய்ப்பு

சீயான் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

காதலில் கவின், கடுப்பில் சாக்சி, கண்டுகொள்ளாத லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் சாக்சி உள்பட நான்கு பெண்களை எளிதில் மடக்க முயன்ற கவினால், லாஸ்லியாவிடம் இன்னும் நட்புடன் கூட நெருங்க முடியவில்லை.

அவங்க எல்லாம் மனுசங்களே இல்லை: லாஸ்லியா தோழிகள் ஆவேசம்

லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்தும் ஆகிவிட்டதாகவும் வதந்தி பரப்புபவர்கள் மனிதர்களே இல்லை என லாஸ்லியாவின் இலங்கை தோழிகள் ஆவேசமாக சாபமிட்டுள்ளனர்.

வனிதாவை காப்பாற்ற கொலைகாரி டாஸ்க்கா? நடத்துங்க பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டின் ரெளடி சூப்பர் ஸ்டார் வனிதா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளரும், ஒவ்வொரு பார்வையாளர்களும் விரும்பும் நிலையில்