நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்...! தமிழக அரசாணை வெளியீடு...!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் இரண்டாயிரத்தை வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வந்த கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் பல மாத ஊரடங்கை அரசு அறிவித்திருந்தது. இதனால் சிறுகுறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இப்படி கடுமளவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வந்தது. இதேபோல் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணநிதியாக அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மறுபடியும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். அதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தவில், நாதஸ்வரம், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு நிவாரணத்தொகையாக 2000 ரூபாய் தருவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6,810 கலைஞர்கள் உள்ளடங்குவர்.ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

செல்ஃபி மோகத்தால் கூவத்தில் மிதந்த இளைஞர்... சுவாரசிய சம்பவம்!

கொரோனா காலத்திலும் செல்ஃபி மோகத்திற்கு மட்டும் குறைவே இல்லாமல் இருந்து வருகிறது.

சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்!

கொரோனா நேரத்தில் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு!

பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி வர்ணா 7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்

தமிழ் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் தூக்கில் தொங்கி தற்கொலை!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணக்கோலத்தில் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது