இந்திய அரசின் அனுமதியை பெற்றது சிவகார்த்திகேயன் பட நிறுவனம்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

புரமோஷன் கன்சல்டண்ட் என்ற பணியில் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'ரெமோ' என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர்டி ராஜா தனது '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தின் பெயருக்கு டிரேட்மார்க் சான்றிதழை பெற்றுள்ளார். காப்புரிமை என்று கூறப்படும் இந்திய அரசின் டிரேட் மார்க் சான்றிதழை இந்நிறுவனம் பெற்றுள்ளதால் இனி இதே பெயரிலோ அல்லது இந்த பெயரை ஒட்டியோ வேறு புதிய நிறுவனங்கள் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'ரெமோ', 'வேலைக்காரன்' படங்களை அடுத்து '24ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பில் 'நேரம்' நாயகன் நிவின்பாலி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி பிறந்த நாளை இன்று மாலை கொண்டாடும் சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12ஆம் தேதியை ஒரு முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட்டின் போர்க்கள நாயகன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"தாதா" என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கமலின் 'விஸ்வரூபம்' குறித்து கருத்து கூறிய பாமக ராம்தாஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவருடைய டுவீட்டில் அரசியல் இருக்கும்.

வைக்கம் விஜயலட்சுமிக்கு அமெரிக்க பல்கலை தந்த கெளரவம்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பல படங்களில் பாடியுள்ளார். குக்கூ, பட்டதாரி', 'என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி, தெறி, உள்பட பல திரைப்படங்களில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி' படத்தில் இடம்பெற்ற ‘யாரு இவன் யாரு இவன்’ என்ற பாட&#