'தமிழ்ப்படம் 2' இயக்குனரின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,March 30 2019]

இயக்குனர் சி.எஸ்.அமுதன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்கிய 'தமிழ்ப்படம்' மற்றும் கடந்த ஆண்டு இயக்கிய 'தமிழ்ப்படம் 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்த நிலையில் 'தமிழ்ப்படம் 2' படத்திற்கு முன்னரே சி.எஸ்.அமுதன் இயக்கிய படம் 'ரெண்டாவது படம்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில ஆண்டுகள் ஆனபோதிலும் சில குறிப்பிட்ட காரணங்களால் வெளியாகவில்லை

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

விமல், அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார். விஜய் உலகநாத் இசையில், சுரேஷ் படத்தொகுப்பில் இந்த பட்ம் உருவாகியுள்ளது