இந்தியக் கிரிகெட் அணியில் சச்சின்? பிசிசிஐ கொடுக்கப்போகும் பதவி என்ன தெரியுமா?

16 வயதில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்து கிரிக்கெட்டில் உலகில் புது சாம்ராஜ்யத்தையே படைத்தவர் சச்சின் டெண்டல்கர். நீண்டநாட்களுக்குப் பிறகு இவரை பிசிசிஐ இந்தியக் கிரிக்கெட் அணிக்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதனால் பெரும் முயற்சி எடுத்தும் வரும் நிலையில் சச்சினுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆலேசாகர் பதவி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இணைந்து 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவுகளுக்கும் தனித்தனிப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐயின் செயல்தலைவர் ஜெய்ஷா சச்சின் டெண்டுல்கருடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற முன்னணி வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகியுள்ளனர். மேலும் பல புதிய வீரர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இந்தியக் கிரிக்கெட அணிக்கு சச்சின் டெண்டுல்கர் மென்ட்ராக நியமிக்கப்படலாம். இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி மீண்டும் புத்துயிர் பெற்றுவர முடியும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.

More News

தனுஷின் 'மாறன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாறன்' என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மீண்டும் இணைகிறது 'ஒருகல் ஒருகண்ணாடி' கூட்டணி!

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கிய 'ஒருகல் ஒருகண்ணாடி' என்ற படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனுஷின் 'வாத்தி' அப்டேட் கொடுத்த நாயகி சம்யுக்தா!

தனுஷ் நடித்துவரும் 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய சாதாரண McDonald’s ஊழியர்!

தெற்காசிய அளவில் முன்னணி பணக்காரராக இருந்துவரும் முகேஷ்

சித்தார்த் மன்னிப்புக்கு சாய்னா நேவால் பதில்!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டுவிட்டுக்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவிட்டுக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அந்த மன்னிப்புக்கு பதிலளித்த