சோதனை தேவையில்லை: மாஸ்க்கை வைத்து கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் டெக்னாலஜி

தற்போது கொரோனா நோயாளியை உறுதி செய்ய வேண்டும் என்றால் அவருடைய இரத்தம் பரிசோதனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும். ஆனால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாஸ்க்கை வைத்தே கொரோனா நோயாளிகளை உறுதி செய்யும் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த மாஸ்க்கை கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் அணிந்தால் அவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ அதில் ஒரு ஒளி தோன்றும். அதில் இருந்தே அவருக்கு கொரோனா தாக்கியுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ஜிகா மற்றும் எபோலா வைரஸ் தாக்கிய நோயாளிகளை கண்டுபிடிக்க இதுபோன்ற மாஸ்குகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த் சிறப்பு மாஸ்க்குகள் நடைமுறைக்கு வந்தால் கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்யும் நேரம் மிச்சமாகும் என்பதும் மிக எளிதாக கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டுபிடித்து தனிமைப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாஸ்க்கை பயன்படுத்த ஆரம்பித்தால் மிக எளிதில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு கண்டு, மனித இனத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவிற்கு முடிவு கட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.