close
Choose your channels

ஹிந்தி தெரியாதா… அப்ப லோன் இல்ல… வங்கி மேலாளரின் செயலால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!!!

Tuesday, September 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிந்தி தெரியாதா… அப்ப லோன் இல்ல… வங்கி மேலாளரின் செயலால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!!!

 

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் அரசு தலைமை மருத்துராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியம். இவர் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள IOB வங்கியில் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக தனது வரவு செலவு கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்து இருக்கிறார்.

ஆனால் வரவு செலவு விவரங்களைப் பார்க்காத வங்கி மேலாளர் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்ற கேள்வியைக் கேட்டு லோன் தர மறுத்து இருக்கிறார். இந்த விவகாரம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. “Do u know hindi” எனக் கேட்ட வங்கி மேலாளருக்கு பாலசுப்பிரமணியம், “I don’t Know hindi, But I Know Tamil and English” எனப் பதில் அளித்ததாகத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் தொடர்ந்து பேசிய வங்கி மேலாளர் “I am from Maharashtra, I know Hindi, Langugage problem” எனக்கூறி லோன் குறித்த விண்ணப்பத்தை பார்க்கக்கூட மறுத்து இருக்கிறார். மேலும் மொழி பற்றிய தனது கருத்தை மட்டுமே திரும்ப திரும்ப கூறியதாகவும் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் “மொழி பற்றிய உணர்வை கிளறிவிட்டு தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக” வங்கி மேலாளருக்கு சம்மனையும் அனுப்பி உள்ளார். மேலும் இந்த விவகாரத்தைக் குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மேலும் கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால் கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர் வருத்ததுடன் தனதுகருத்தை பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.