ரிலீசுக்கு முன்பே 'குட் பேட் அக்லி' சாதனையை முறியடித்த 'ரெட்ரோ'.. மாஸ் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த 'ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முன் பதிவை 'ரெட்ரோ’ முந்திவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
24 மணி நேரத்தில் 'ரெட்ரோ’ திரைப்படம் 5 கோடி ரூபாய் வசூல் முன்பதிவில் மட்டும் கிடைத்துள்ளதாகவும், இது சூர்யா படங்களில் செய்யப்பட்ட முன்பதிவு சாதனை என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி இந்த படம் ரிலீஸ் ஆகும் மே ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் காலை காட்சி முதல் இரவு காட்சி வரை அனைத்து காட்சிகளும் மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 24 மணி நேரத்தில் 57 ஆயிரம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் 'ரெட்ரோ’ திரைப்படம் அதே 24 மணி நேரத்தில் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் ரிலீஸ்க்கு முன்பே அஜித்தின் ’குட் பேட் அக்லி’ சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மொத்த வசூல் சாதனையை 'ரெட்ரோ’ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com