close
Choose your channels

சுகிசிவம் பெல்லி டான்ஸ் ஆடுவாரா? 'பிளான் பண்ணி பண்ணனும்' ஸ்னீக்பிக் வீடியோ

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ, ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ’பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் 3 நிமிட ஸ்னீக்பிக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை அனைகா சோட்டியை அழைக்க ரியோ மற்றும் பாலசரவணன் வந்திருக்கும் வந்திருக்கும் காட்சி உள்ளது. அதில் சுகி சிவம் என் அளவுக்கு டான்ஸ் ஆட மாட்டார் என்றும் நான் பெல்லி டான்ஸ் ஆடியதை பார்த்து அவர் அசந்து போனார் என்றும் என்னிடம் பெல்லி டான்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகிசிவம் அடம் பிடித்தார் என்றும் அனைகா சோட்டி கூறும் காட்சி காமெடியன் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ, ரம்யா நம்பீசன், எம்எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், பாலசரவணன், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.