close
Choose your channels

ரம்யாவை தூக்கி வைத்த கட்-அவுட்: ரியோவை வெட்கப்பட வைத்த நண்பர்கள்

Saturday, January 23, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் இரண்டாவது ரன்னரான ரியோவை வரவேற்ற வீடியோ காட்சிகள் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவரது நண்பர்கள் ஒருசில பிளக்ஸ்போர்டு கட் அவுட்டுகளை வைத்து அவரை வரவேற்ற காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது

இந்த வீடியோவில் முதல் கட்-அவுட்டில் ’டேக் இட்’ என்று கொடுத்து கொடுத்து சிவந்த கொடை வள்ளல் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனை அடுத்து ’கும்மு கும்மு என்று கும்மியபோதும் கம்முனு இருந்தா காந்தியடிகளே என்ற கட்-அவுட்டை பார்த்த ரியோ, ‘நான் இருக்கட்டுமா? இல்லை திரும்ப போகட்டுமா? என்று நண்பர்களை பார்த்து கேட்டார்

இதற்கு அடுத்த கட்-அவுட் தான் ஹைலைட். ‘அடிபட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்த அமிர்தாஞ்சனே’ என்ற கட்-அவுட்டில் அவர் ரம்யாவை கையில் தூக்கி வைத்திருந்த காட்சி இருந்தது. இதை பார்த்ததும் ரியோ வெட்கப்பட்டார் என்பதும் அவரது அருகே ரியோவின் மனைவி ஸ்ருதிராஜ் ‘என்ன இதெல்லாம் என நண்பர்களிடம் செல்லமாக கடிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து ’உயிரை கையில் பிடித்துக்கொண்டு 300 நாட்கள் உலாவிய உயிர்மூச்சு’ என்ற கட்-அவுட் மற்றும், ’ஆரிக்கே அட்வைஸ் செய்த அதிசயமே, அறிவு களஞ்சியமே, அற்புதமே ’என்ற கட்-அவுட்டை பார்த்த ரியோ கலகலப்பாக சிரித்த காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது

மொத்தத்தில் ரியோவை வேற லெவலில் அவரது நண்பர்கல் வரவேற்ற இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz