தல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி!

பிரிஸ்பனில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இன்னமும் 22-23 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிபெற 134 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீரர்கள் களத்தில் அதிரடி காட்டி வருகின்றனர்.

ரஹானே 22 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் என ஆக்ரோஷமாக விளையாடினார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் பெய்ன் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது தேவையில்லாத ஷாட் எனப் பலரும் விமர்சனம் செய்தனர். அடுத்து வந்த ரிஷப் பந்த் 10 ரன்கள் எடுத்து தற்போது களத்தில் விளையாடி வருகிறார். புஜாரா 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் ரிஷப் பந்த் 2 ரன்களை எடுத்தப்போது 1,000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தினார். இச்சாதனை தல தோனியின் அதிவேக சாதனையை முறியடித்து இருக்கிறது. இதனால் பலரும் ரிஷப் பந்திக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை எடுக்க 32 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. ஆனால் ரிஷப் பந்த் 27 இன்னிங்ஸ்களில் சாதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல பரூக் இஞ்சினியர் 36 இன்னிங்ஸ், கிரண் மோரே 50, நயன் மோங்கியா 39, சையத் கிர்மானி 45 ஆகிய விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் 1,000 ரன்களை எடுத்து உள்ளனர். ஆனால் டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை அதிவேகமாக எடுத்த குவிண்டன் டி காக் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறார். தல தோனியின் இன்னிங்ஸ்களை விட குறைவான இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை எடுத்து ரிஷப் பந்த் தற்போது சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

More News

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாயகன் ஆரி அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றதற்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

கொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்!

கொரோனாவுக்கு பயந்து மனிதர்கள் சில நேரங்களில் பல விசித்திரமான நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது அம்மாவட்டத்தின் மகிளா நீதிமன்றம்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'பத்து தல' திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது என்பதும் நேற்று வெளியான 'பத்து தல'படத்தின்

வரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.