'காந்தாரா' இரண்டாம் பாகத்தில் செம ட்விஸ்ட்.. பக்கா பிளான் போடும் ரிஷப் ஷெட்டி!

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இதற்காக ரிஷப் ஷெட்டி பக்கா பிளான் போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான 'காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூபாய் 16 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரை உலகில் மிக அதிகமான லாபம் சம்பாதித்த படங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற 'காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தைய சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படும் படம் தான் 'காந்தாரா 2’ என்றும் இந்த கதையை தற்போது ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை முழுக்க முழுக்க காடுகள் மற்றும் கடலோர பகுதிகளில் படமாக்க அவர் பக்கா பிளான் போட்டுள்ளதாகவும், இதற்காக அவர் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 'காந்தாரா 2’ திரைப்படம் இந்திய திரை உலகில் மிகப்பெரிய பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் முழுக்க முழுக்க முதல் பாகத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்கள் தான் இரண்டாம் பாகத்திலும் பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 'காந்தாரா’ படம் போலவே 'காந்தாரா 2’ படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித் கலந்து கொண்ட விஜய் திருமணம்... தளபதி மெட்டி போடும் அழகே தனி.. அரிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் திருமண புகைப்படங்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

என்ன ஒரு தைரியம்?  குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் நடிகை: வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா?

கடந்த நூறு நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முடிவடைய போகிறது என்பதும் உலக நாயகன் கமலஹாசன் நாளை மறுநாள் டைட்டில் வின்னர் யார் எ

மிட்வீக் எவிக்சனில் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம். 

கதறி அழும் விக்ரமன்... என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடை இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் கதறி அழும் வீடியோ