சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் 'இறுதிச்சுற்று' நாயகி

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஷிவலிங்கா' படத்தை இயக்கிய பி.வாசு, தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளார்.
சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க முடிவு செய்யப்பட்ட தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த நிலையில் தற்போது வேதிகா கேரக்டரில் நடிக்க 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகாசிங்கை இயக்குனர் பி.வாசு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு வித்தியாசமான நடிகை தேவைப்பட்டதாகவும், ஒரே ஒரு படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற ரித்திகாசிங் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்ததாக பி.வாசு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஒரு முஸ்லீம் கேரக்டரில் தனது மகன் சக்தி நடிக்கவுள்ளதாகவும் தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 14 முதல் பெங்களூரில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமிழிலும் 'ஷிவலிங்கா' என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More News

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா நடித்து முடித்துள்ள 'நாயகி'...

சிம்பு-ஆதிக் படத்தில் யுவன் செய்த புதுமை இதுதான்...

சிம்பு நடிப்பில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள 'அன்பானவன் அசராவதவன் அடங்கதவன்'...

'தல 57' படத்தில் அஜித் கேரக்டர் என்ன? புதிய தகவல்

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது...

’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

‘காதல் கொண்டேன்’ படத்தில் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு அந்த காயம் மனதில் ரணமாக இருந்துகொண்டு இருக்கும் சிறுவன் கிராமத்து விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவன்...

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர்

ஜெயம் ரவி நடிப்பில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...