close
Choose your channels

விஷாலுக்கு முதல்முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை!

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ’சக்ரா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

’துப்பறிவாளன் 2’, ‘சக்ரா’ ஆகிய படங்களை அடுத்து அரிமா நம்பி மற்றும் இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ரிதுவர்மா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் துல்கார் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஷால் படத்தில் நாயகியாக ரிதுவர்மா நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் பிஸியாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.