close
Choose your channels

எம்.ஜி.ஆர் மனைவியாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்

Monday, September 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாழக்கை வரலாறு திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் முகஜாடையில் இருக்கும் சதீஷ்குமார், எம்ஜிஆராக நடித்து வரும் இந்த படத்தில் அவருடைய மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் பிக்பாஸ் 2 டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ரித்விகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

மேலும் கருணாநிதி, ஜெயலலிதா கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.