கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் இரு விருந்தினர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே முகின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதி உள்ள ஐவரில் யார் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது அனேகமாக இந்த வாரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு புதிய சிறப்பு விருந்தினர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னரான ரித்விகாவும், கோல்டன் டிக்கெட் பெற்ற ஜனனியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாகவும் இவர்களுடைய காட்சி நாளைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெண் போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இரண்டு பெண் போட்டியாளர்கள் மட்டுமே இருந்தாலும் இருவருமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்களா? என்ற கேள்வி குறியே உள்ளது.

இந்த நிலையில் பெண் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் சீசனின் இரண்டு பெண் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஷ பாட்டில் என்ற பட்டப் பெயரை கொண்ட ஜனனி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஏதேனும் குழப்பத்தையும் விளைவிப்பாரா அல்லது போட்டியாளர்களுக்கு ஊக்கம் கொடுப்பாரா? என்பதை நாளை பார்ப்போம்.

More News

'சயிரா நரசிம்மரெட்டி சென்சாரில் ஒரு ஆச்சர்யம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

தலைவர் பதவியை பிடிக்க தரையில் உருளும் போட்டியாளர்கள்

ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவியை பிடிக்க ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் கேப்டன் போட்டியில் பங்கேற்க கவின், முகின், சாண்டி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்

சுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் வைத்ததே காரணம்

'பிகில்' படத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

தனுஷின் 'அசுரன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்