அத்திவரதரை தரிசனம் செய்த பிக்பாஸ் புகழ் நடிகைகள்

  • IndiaGlitz, [Wednesday,August 14 2019]

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஒன்றரை மாதங்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதர் நாளை மறுநாள் மீண்டும் குளத்திற்குச் செல்ல உள்ளதால் இன்றும் நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாட்களாக அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவரை தரிசனம் செய்தனர் என்பது தெரிந்ததே. அதேபோல் 'பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, நடிகை த்ரிஷா உள்பட பல கோலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் நடிகைகளுமான ரித்விகா மற்றும் ஜனனி அய்யர் ஆகிய இருவரும் இன்று அத்தி வரதரை காஞ்சிபுரம் சென்று தரிசனம் செய்தனர். இது குறித்த புகைப்படத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

More News

நடிகரை அடுத்து பாடகர் அவதாரம் எடுத்த துருவ் விக்ரம்

சீயான் விக்ரம் மகன், கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக் படமான 'ஆதித்யவர்மா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'மாமனிதன்' உட்பட ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படம் 'சயிர நரசிம்ம ரெட்டி'

கண்ணீரில் கவின், சீறும் சாண்டி, கம்பி எண்ணும் கஸ்தூரி! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் வீட்டில் கடந்த 50 நாட்களாக சின்ன சின்ன சண்டைகளுடன் சென்று கொண்டிருந்தாலும், அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்து கொண்டிருந்தன.

கமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பேர்கள் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

'மாநாடு'க்கு பதில் 'மகா மாநாடு': சிம்புவின் அதிரடி முடிவு

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.