close
Choose your channels

பிக்பாஸ் ரித்விகாவுக்கு திருமணம் எப்போது? அவரே அளித்த பதில்

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளராகி பலரின் மனதை கொள்ளையடித்த நடிகை ரித்விகா தற்போது ஒருசில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரித்விகாவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ரித்விகா கூறியபோது, 'தற்போது நான் ஒருசில படங்களில் நடித்து கொண்டிருப்பதால் கண்டிப்பாக எனது திருமணம் இந்த ஆண்டு கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். அதற்குள் ஏற்கனவே கமிட் ஆன படங்களை முடித்துவிடுவேன். புதிய படங்களில் கமிட் ஆகும் எண்ணம் இல்லை' என்று கூறினார்.

மேலும் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரித்விகா, 'அதை என் வருங்கால கணவர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார். ரித்விகாவின் திருமணம் குறித்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்ததோடு, திருமணத்திற்கு பின்னரும் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.