திரையரங்கில் சூப்பர் ஹிட்டான 'ஜோ' டிஸ்னி ஹாட்ஸ்டாரில்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ரொமான்டிக் பொழுதுபோக்கு படமான 'ஜோ' படம் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பொங்கல் பண்டிகையை, பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில், இயக்குனர் S ஹரிஹரன் ராமன் இயக்கத்தில் உருவான ரொமான்டிக் பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜோ' படத்தை, ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள, இந்த அழகான ரொமான்டிக் பொழுதுபோக்கு திரைப்படம், சித்து குமார் அழகான இசை மற்றும் ராகுல் K G விக்னேஷ் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஒரு யதார்த்தமான காதல் கதையுடன் பார்வையாளர்களை நிச்சயமாக நெகிழ வைக்கும் படைப்பாக இருக்கும்.

முன்னணி நட்சத்திர நடிகர்களுடன், இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோ (ரியோ) என்ற இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணை பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை பற்றியதாக அமைந்துள்ளது.

இயக்குனர் ஹரிஹரன் ராமின் வாழ்க்கையில் நடந்த, நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தை டாக்டர்.D.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

இயக்குநராக அறிமுகமான அந்தோணி தாசன்.. பிரபலங்கள் வாழ்த்து..!

நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பாடகர் அந்தோணிதாசன் இயக்குனராகியுள்ளதை அடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்பு காட்டினா புலி கூட பசுதாங்க அய்யா... விஜய் டிவி புகழ் நடித்த 'ஜூகீப்பர்' டீசர்..!

விஜய் டிவியில்  ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் தற்போது  திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகி

பிக்பாஸ் இறுதி போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்திய கமல்ஹாசன்.. என்ன செய்கிறார் பாருங்கள்..!

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில்  சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் காட்சி இருப்பதை அடுத்த பிக் பாஸ் போட்டியாளர்கள்

தமிழ், தெலுங்கில் தயாராகும் தனுஷின் 'D51': படப்பிடிப்பு எப்போது?

 தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது  தனது 50வது படத்தை நடித்து

மாயாவுக்கு 2ஆம் இடம் கூட கிடைக்கவில்லையா? அப்ப ரன்னர் அப் யாரு?

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தகவல் நேற்றே கசிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.