close
Choose your channels

சிபிராஜ் அடுத்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகை

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அன்பரசன் இயக்கி வரும் இந்த படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்ற நடிகை நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற நடிகை ரித்விகா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரித்விகா நாயகியாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர்கள் கவுதம்மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்து வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவில் இளையராஜா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை 11.11 புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.