இவ்வளவு தெளிவா பிளே பண்ணியிருக்கான்னா, அவன் சாதாரண ஆள் இல்லை: 'ரன் பேபி ரன்' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை வெளியான ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படங்கள் நகைச்சுவையுடன் கூடிய சமூக கருத்துக்களை கூறும் படங்களாக இருந்த நிலையில் முதல் முறையாக த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இந்த படத்தின் டிரைலரில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய ஆர்ஜே பாலாஜி அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஆர்ஜேபாலாஜி படம் முழுக்க சீரியஸ் ஆக வருகிறார் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. அதே போல் ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் இந்த படத்தின் முதுகெலுங்குபாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து ஆர்ஜே பாலாஜிக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படம் ரசிகர்கள் மனதை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஓடிடிக்காக உருவாகும் சூரியின் படம்.. நாயகி இந்த பிரபலமா?

 சமீபகாலமாக திரையுலகின் நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பதும் சந்தானம் உள்பட பல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்

உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுகாதீங்க... வனிதா விஜயகுமார் எச்சரிக்கை!

உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க என வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 

தனுஷின் 'D50' படத்தில் இவர் தான் நாயகியா?

தனுஷின் 50வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது என்பதையும் ஏற்கனவே

ரூ.13 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டு வாய்ப்புகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் 3 லட்ச ரூபாய் பணமூட்டையை கதிரவன்

ஜனவரி 26ல் வெளியாகும் தமிழ் வெப்தொடர்: ZEE5 அறிவிப்பு

முத்துக்குமார் இயக்கத்தில் எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் உருவான இந்தத் தொடரில் அறிமுக நடிகை அபி நக்ஷத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்