'என்னை வாடின்னு கூப்பிட்டான் ஆர்ஜே பாலாஜி: ஊர்வசி கூறும் ஷாக்கிங் தகவல்

ஊர்வசி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய ஊர்வசி, ‘என்னை ஆர்ஜே பாலாஜி வாடி என்று கூப்பிட்டான்’ என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ஜேபாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்பட பலரது நடிப்பில் உருவான ’வீட்ல விசேஷங்க’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஊர்வசி ’ஆர்ஜே பாலாஜி என்னை வாடி என்று கூப்பிட்டான் என்று காமெடியாக கூறினார். அப்போது மேடைக்கு வந்த ஆர்ஜே பாலாஜி, ‘நீங்கள் ரொம்ப அநியாயமாக பேசுகிறீர்கள், நான் ஊர்வசி என்று வேண்டுமானால் கூப்பிட்டு இருப்பேன், ஆனால் வாடி என்று கூப்பிட்டதே இல்லை என்று கூற, ஆனால் அதை மறுத்த ஊர்வசி, ‘நீ என்னை வாடி என்று கூப்பிட்டாய், எனக்கு நன்றாக தெரியும் என்று கூற அதற்கு ஆர்ஜே பாலாஜி, ‘நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் என்று கூறியது பெரும் நகைச்சுவையாக இருந்தது.

அதன்பிறகு ஆர்ஜே பாலாஜி பேசியபோது, ‘ஊர்வசி மேடம் அவர்களை நான் என்னுடைய அம்மாவாகத்தான் பார்க்கிறேன். அவருடன் எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. அவருடன் நான் சேர்ந்து நடித்தது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியம்’ என்று கூறினார்.

அதன் பிறகு ஊர்வசி பேசியபோது, ‘புதுக்கவிதை’ படத்தில் வரும் பாட்டின் வரிகளை போல் ’என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்’ என்பதுபோல், என்னை யார் என்று புரிய வைத்தது ஆர்ஜே பாலாஜி தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த விழா ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹன்சிகா படத்தில் வில்லனாகும் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்: இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என யுவன்சங்கர்ராஜா அளித்த பேட்டியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வருக்கு நன்றி: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

27 வருடத்திற்கு பின் அந்த பிரபலத்தை சந்தித்தேன்: ஜிவி பிரகாஷ் பகிர்ந்த புகைப்படங்கள்

ஜிவி பிரகாஷூக்கு தற்போது 34 வயது ஆகும் நிலையில் 7 வயதில் அதாவது 27 வருடங்களுக்கு முன் சந்தித்த அந்த பிரபலத்தை மீண்டும் சந்தித்தேன் என இரண்டு புகைப்படங்களை ஜிவி பிரகாஷ் குமார்

'கைதி 2' படம் எப்போது? ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்