ஆர்ஜே பாலாஜியின் மனைவி குழந்தைகளை பார்த்து இருக்கிறீர்களா? இதோ செம புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

எப்.எம் வானொலியில் ஆர்ஜே வாக இருந்து அதன் பின்னர் தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, அதன்பின் ஹீரோ, இயக்குனர் என அடுத்தடுத்து புரமோஷன் பெற்று வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி அதன் பின்னர் ’கடவுள் இருக்கிறான் குமாரு’ ’கவலை வேண்டாம்’ உள்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற படம் இவருக்கு திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அதன் பிறகு ’எல்கேஜி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ ’வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களிலும் முக்கிய இடத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ’ரன் பேபி ரன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.


 

More News

பார்த்திபனின் அடுத்த படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாசிட்டிவ் வசனங்கள் குவிந்தது

ரம்யா பாண்டியனின் கிளாமருக்கு கிடைத்த பலன்.. பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம்!

திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத பல நடிகைகள் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து, திரை உலகினர் மற்றும் ரசிகர்களின்

'துணிவு' படம் வெற்றி.. உடனே மலையேறிய எச் வினோத்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்றும் இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்'.. விக்னேஷ் சிவனின் பதிவு வைரல்

 'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு, அதை விட்ற கூடாதுன்னு முடிவு பண்ணினேன்: 'கள்வன்' டீசர்

ஜிவி பிரகாஷ் நடித்த 'கள்வன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.