close
Choose your channels

தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்!

Monday, February 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ரிலிசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் காத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்ததால் இம்மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! என அறிவித்து 'பிப்ரவரி 22ல் இந்த படம் ரிலீஸ் என்ற் வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். மேயாத மான்" படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.