close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் மோதும் ஆர்ஜே பாலாஜி.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்த ’ரன் பேபி ரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்தார் என்பதும் அதன் பிறகு அவர் நாயகனாக நடித்த ’மூக்குத்தி அம்மன்’ ’வீட்ல விசேஷம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து தற்போது அவர் ’சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ’ரன் பேபி ரன்’ ஆகிய இரண்டு படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதில் ’ரன் பேபி ரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் தான் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான ’மைக்கேல்’ என்ற திரைப்படமும் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. எனவே விஜய் சேதுபதி மற்றும் ஆர் ஜே பாலாஜி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos