close
Choose your channels

சூப்பர்ஹிட் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் ஆர்ஜே பாலாஜி! கே.பாக்யராஜூடன் பேச்சுவார்த்தை!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாதாய் ஹோ’. காமெடி திரைப்படமான இந்த திரைப்படம் 29 கோடியில் தயாராகிய நிலையில் 229 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய ஹிட்டான இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் ’மூக்குத்தி அம்மன்’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதே டைட்டிலில் ஏற்கனவே கே பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில் இந்த தலைப்புக்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.