அரசியல்வாதிகளே! என் படத்தையும் கொஞ்சம் கவனியுங்க: ஆர்.ஜே.பாலாஜி

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

தற்போது ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்றால் அந்த படத்திற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண வெற்றிப்படங்களான 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' படங்களை ஒருசில அரசியல்வாதிகள் சூப்பர்ஹிட் படங்களாக மாற்றியுள்ளதே இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் படத்திற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த அரசியல்வாதிகள் எங்கள் படத்திற்கு ஓரவஞ்சனை பார்ப்பது ஏன்? என்று சமீபத்தில் 'தமிழ்ப்படம் 2' இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்

இந்த நிலையில் தற்போது முதல்முறையாக 'எல்.கே.ஜி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் இதேபோன்ற ஒரு வேண்டுகோளை தனது சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே! பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் ஹெல்ப் பண்ணுங்க...ப்ளீஸ்' என்று பதிவு செய்துள்ளார்.

'சர்கார்' படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் பழ.கருப்பையா நடித்தது போலவே இந்த படத்திலும் நாஞ்சில் சம்பத் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் சர்கார்' படம் போலவே இந்த படமும் அரசியல் குறித்த கதையம்சம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. 'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'ராட்சசன்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர்.

நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2வது மகளும், 'கோச்சடையான்', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா, கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார்.

இலவசங்கள் குறித்து 'சர்கார்' படத்திற்கு எதிரான கருத்தை கூறிய ரஜினி

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் சமீபத்தில் வெளியானபோது இந்த படத்தில் 'இலவசங்களை கொடுத்து மக்களை அரசியல்வாதிகள் சீரழித்து கொண்டிருக்கின்றனர்

பிரதமர் மோடி பலசாலியா? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார். 'எந்த 7 பேர் என்பது குறித்த சர்ச்சைக்கும், பாஜக ஆபத்தான கட்சியா?

'எந்த 7 பேர்' என்பது குறித்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டி அளித்தாலும் அந்த பேட்டியில் உள்ள ஒரு சிறுகுறை பெரிதாக்குவது, அல்லது அவர் சொன்னதை திரித்து கூறி பரபரப்பை ஏற்படுத்துவது என்பது