நெல்சன் குறித்து ஆர்ஜே பாலாஜி சொன்னது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். ஆனால் அவர் இயக்கிய ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நெடிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். குறிப்பாக லோகெஷ் கனகராஜின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் குறித்த மீம்ஸ் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் குறித்த மீம்ஸ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள கூறியிருப்பதாவது: நெல்சன் ஒரு அருமையான இயக்குனர். நான் அவருடன் பல நிகழ்ச்சியில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களின் தீவிர ரசிகன் நான்.

அவர் ஒரு ஆச்சரியமான திறமையை கொண்டவர். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற மீம்ஸ்களை நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் குறித்து ஆர் ஜே பாலாஜி பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

திருமணத்திற்கு பின் வெளியாகும் நயன்தாரா படத்தின் முதல் புரமோஷன்!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடித்த படத்தின் புரமோஷன் தற்போது வெளிவந்துள்ளது

'யானை' ரிலீஸ் ஒத்திவைப்புக்கு கமல் தான் காரணம்: தயாரிப்பு நிறுவனம் தகவல்!

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'யானை'  திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக

'சந்திரமுகி 2' படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரபு, ஜோதிகா உள்பட பலர் நடித்த திரைப்படம் 'சந்திரமுகி'. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வசூல் மழை பெய்தது

'சின்னத்தலைவர் ஆகின்றாரா சிவகார்த்திகேயன்? 'தலைவர் 169' படத்தின் மாஸ் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்: குவியும் லைக்ஸ்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.