சிவகார்த்திகேயன், சந்தானத்துடன் போட்டியா? ஆர்ஜே பாலாஜி விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர்களுடன் போட்டியா? என்ற கேள்விக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவான ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படம் வரும் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் முறையாக ஆர்.ஜே பாலாஜி ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ரன் பேபி ரன்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறிய போது முதல் படம் அரசியல் படமாகவும், இரண்டாவது படம் ஆன்மிக படமாகவும் இருந்ததால், ஒரு இமேஜுக்குள் அடங்கி விடக்கூடாது என்பதற்காக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன்.

'ரன் பேபி ரன்’ படம் இருக்கை நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் நடித்த ’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களும் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்றும் தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன், சந்தானம் என யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் ’மைக்கேல் மதன காமராஜன்’ மாதிரி ஒரு படத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More News

இளம் வயதில் உயிரிழந்த ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செய்த கார்த்தி!

 நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் இளம் வயதில் மரணமடைந்ததை அடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

'வாடிவாசல்' படத்தில் இணைந்த 'அவதார்' படக்குழுவினர்.. வேற லெவல் தகவல்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் ஆக வெளிவந்த தகவல் பெறும் ஆச்சரியத்தை

ரஜினியின் பெயர், புகைப்படம், குரல்: வழக்கறிஞரின் எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வணிக ரீதியிலான நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு

3 வாரத்தில் ரூ.300 கோடியை நெருங்கு வசூல்.. 'வாரிசு' படக்குழுவினர் குஷி!

பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் போற்றும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

உதயநிதி-கிருத்திகாவா இது? இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படம்!

 நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திருமண புகைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.