கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும்: ஆன்லைன் வகுப்பு குறித்து பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை, இன்னும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை கடந்த சில வாரங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகள் காலை முதல் மாலை வரை சில பள்ளிகள் நடத்துவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்: இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் மன அழுத்தத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு விஷயமாக ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் தினமும் 8 மணி நேரம் 9 மணி நேரம் குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பது என்பது உடல் அளவிலும் மன அளவிலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவைகளை எப்படி அந்த குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியும்.

இத்தனை நாட்களாக டிவி பார்க்க வேண்டாம், போன் பார்க்க வேண்டாம் என்று சொல்லி வளர்த்த பெற்றோர்கள் தற்போது டிவி பாரு, போன் பாரு என்று சொல்லும் போது மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்காதா? பெரியவர்களுக்கே அதிக நேரம் போனையும் கம்ப்யூட்டரையும் பார்த்துக்கொண்டிருந்தால் பிரச்சனைகள் ஏற்படும் போது குழந்தைகள் இதை எப்படி சமாளிப்பார்கள் என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள்.

இப்பொழுது ஆன்லைன் கிளாஸ் எடுத்தால்தான் பீஸ் கேட்க முடியும் என்பதற்காகவே சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பை நடத்தி வருவதாக தெரிகிறது. அது மட்டுமின்றி பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பை நடத்தலாம். ஆனால் இதற்கு இதுதான் தீர்வா? காலங்காலமாக 8 பீரிட்யட் என்று பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களை திடீரென ஆன்லைன் வகுப்புக்கு மாற்றுவது என்பது சரியா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

இது மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஒரு அழுத்தமாக தான் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆசிரியர்கள் பாடங்களை வீடியோ ரெக்கார்ட் செய்து குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகள் எப்போது அவர்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்போது அதைப் பார்த்து படித்துக்கொள்கிறார்கள். இது போல் தமிழகத்திலும் செய்யலாமே? தயவு செய்து இது குறித்து யோசித்து பாருங்கள் என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். அவருடைய இந்த ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

More News

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ஊடகத்திடம் திடீரென மன்னிப்பு கேட்ட குஷ்பு: என்ன காரணம்?

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு ஆடியோ வைரலானதை அடுத்த இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளதோடு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்??? அமெரிக்கா, சீனா இடையே நிலவும் கடும் போட்டி!!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பல வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன.

தென் கொரியாவுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படும்!!! காட்டத்தில் வட கொரியா!!!

உலகிலேயே மிகவும் மர்மமான நாடாகவும், சர்வதேச அளவில் அச்சுறுத்தும் நாடாகவும் கருதப்படும் வடகொரியா தற்போது தென் கொரியாவுடன் இருக்கும்