close
Choose your channels

தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி!

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments

’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ஆயுஷ்மான் குரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் ஆர்கே பாலாஜி இயக்கி நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்திற்கு வீட்ல விசேஷங்க என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக பாக்யராஜிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் இயக்குனர் ராமுடன் இணைய உள்ளதாக தெரிகிறது. இயக்குனர் ராம் கூறிய கதை ஒன்று ஆர்ஜே பாலாஜிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் ராம் கடந்த 2019ஆம் ஆண்டு ’பேரன்பு’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.
 

Get Breaking News Alerts From IndiaGlitz