close
Choose your channels

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், கமல்ஹாசன் நடித்து வரும் சேனாதிபதி கேரக்டரின் பேரனாக சித்தார்த் நடிக்கவிருப்பதாகவும், மற்றொரு முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் நடிப்பதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஆர்ஜே பாலாஜி நடிப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் கமல் மற்றும் ஷங்கரின் படத்தில் ஆர்ஜே பாலாஜி முதல்முறையாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz