நாற்பதே நாட்களில் அடுத்த படத்தை முடித்த ஆர்ஜே பாலாஜி: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோ மட்டும் இயக்குநராக மாறினார் என்பதும், அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்திலும் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு வெற்றிகளை அடுத்து தற்போது அவர் புதிய படத்தை நடித்து இயக்கி வருகிறார். கடந்து 2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’பதாய் ஹோ’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அடுத்த படத்தை 40 நாட்களில் முடித்து விட்டதாகவும், கோவை மக்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், இந்த படத்தின் குழுவினர்களுடன் பணிபுரிந்தது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டு ஒரு மிகச்சிறந்த பேமிலி என்டர்டைன்மென்ட் படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

இந்த குட்டிப்பாப்பா இன்றைய முன்னணி தமிழ் ஹீரோயின்: யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

தமிழ் நடிகைகள் பலர் கடந்த சில மாதங்களாக தங்களுடைய சிறுவயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை!

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஊர்வசி ரௌடாலா பெற்றுள்ளார்.

ஆயுத பூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யாவின் படம்!

தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறந்து விட்ட நிலையில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நீண்ட விடுமுறை தினங்கள் காரணமாக பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரசிகர் மன்றத்தை வேற லெவலில் விரிவுபடுத்த சிம்பு திட்டம்: பரபரப்பு அறிக்கை!

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக அதிக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது

கன்னட சீரியல் நடிகை திடீர் தற்கொலை… சொந்த வாழ்க்கை காரணமா?

கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த நடிகை சௌஜன்யா திடீரென்று தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை