அஸ்வின் இந்தியர், விவசாயிகள் மட்டும் தமிழர்களா? நிருபரை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும், நெடுவாசல் போராட்டத்தின்போது அவருடைய உண்மையான ஈடுபாடு அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காக டெல்லியில் கடந்த ஒரு மாதமாக போராடி வரும் தமிழக விவசாயிகள் குறித்த விவாதம் ஒன்று ஆங்கில தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் ஆர்ஜே பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது நிருபர் 'தமிழக விவசாயிகள் என நிருபர் கூற அதற்கு ஆர்ஜே பாலாஜி, 'சார் மன்னிக்கவும், அவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான். ஆனால் இந்திய விவசாயிகள் என்று கூறினார். மேலும் 'கிரிக்கெட்டில் அஷ்வின் சாதனை படைக்கும் போது மட்டும் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறீர்கள். அப்போது அவர் தமிழனாக தெரியவில்லையா? இவர்களை இந்திய விவசாயிகளாக பாருங்கள், அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்'' என நிருபரை கலாய்த்தார்.