ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படம்.. ஹீரோயின் இந்த பிரபலமா? ஸ்னீக்பீக் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,April 14 2024]

கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கும் ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சற்றுமுன் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழில் உள்ள பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து வரும் ஆர்ஜே விஜய் சில திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது ’வைஃப்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இந்த படத்தை ஹேமநாதன் என்பவர் இயக்கி வருகிறார். திருமணத்திற்கு பின் தம்பதிகள் இடையே ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை கொண்ட நகைச்சுவை படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது

‘ஜிப்ஸி’ ’டாடா’ ’கழுவேதி முருகன்’ போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல ஹீரோவுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா.. டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வீடியோ..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில்.. தனுஷ்-விக்ரம் கலவையா?

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் முத்தையா தனது மகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

'தலைவர் 171' படத்திற்கு முன்பே ஒரு லோகேஷ் கனகராஜ் படம்.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் டைட்டில் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக

ரஜினிக்கு மகளாக நடிக்கிறாரா கமல் மகள்? லோகேஷ் வேற லெவல் திட்டம்.!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமன்னா - ராஷி கண்ணாவின் செம்ம டான்ஸ்.. 'அரண்மனை 4' சிங்கிள் வீடியோ பாடல்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்